நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் .அந்த கடிதத்தில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும் என்று தெரிவித்தார் .
இந்நிலையில் ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மார்ச் 16ஆம் தேதியில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது .பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் விளக்கம் தந்தார்
நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணமாக இருந்துள்ளது .பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும்,வெளியே சென்றால் கொரோனா பரவாது, இது தான் ஸ்டாலினின் பாணி.
முதல்வரின் யதார்த்தமான கருத்துகளை கூட ஸ்டாலின் விமர்சிக்கிறார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசில் எந்தக் குறைகளையும் காண முடியாது. அதிமுக அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…