வீரத்துடனும், விவேகத்துடனும் நமது ஆட்சி நடைபெற்று வருகிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடனும் நடைபெற்று வருகிறது என்பதை தமிழக மட்டுமல்ல இந்திய துணை கண்டமே தற்போது உணர்ந்துள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தனது பதிப்புரையை வழங்கி வருகிறார். அதில் அவர் குறிப்பிடுகையில், ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அதனை அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காப்பாற்ற எனது சக்தியை மீறி நான் செயல்படுவேன். நான் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் என்பதை நிரூபித்து காட்டிய தருணம் தான் ஜனவரி 9 என ஆளுநர் உரை குறித்து மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக எந்தவித சமரசமும் இன்றி ஆட்சி செய்து வருகிறோம். நாம் அறிவித்த தேர்தல் அறிவிப்புகளில் 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி தற்போது வெற்றி பெற்று வருகிறது. என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
அடுத்ததாக, தமிழ்நாட்டில் தற்போது வரையில் 2.23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளன. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு ஆகும். எனவும் தனது உரையில் முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பணவீக்கம் தற்போது குறைவாகவே உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு பெறவேண்டிய நிலை தான் தற்போது நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆயிரம் புதிய அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவும் தனது பதிலுரையில் முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும், சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடனும் நடைபெற்று வருகிறது என்பதை தமிழக மட்டுமல்ல இந்திய துணை கண்டமே தற்போது உணர்ந்துள்ளது. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் இருக்கிறது. அதுவே மக்கள் மனதை வென்றுள்ளது. நாம் ஆட்சி புரிந்த காலம் குறைவுதான். ஆனால், ஆற்றியுள்ள பணிகள் மிகவும் அதிகம். எனவும் தனது ஆட்சி பற்றி முதல்வர் மு.க .ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.