ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம்- முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தும்பூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியது திமுக. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் .திமுகவால் தான் ஜெயலலிதா சிறை சென்றார். ஜெயலலிதா பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் முடிந்து விடும்.தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், ஸ்டாலின் பேசி வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.