வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம்-பிரேமலதா
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து வேலூர் வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம் . திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவேண்டாம் என்று தெரிவித்தார்.