பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – அண்ணாமலை
பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கோவையில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும், விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வராம்பிற்குள் கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய கூட்டணி சுமுகமாக செல்கிறது, வருகிற 22-ஆம் தேதிக்குள் இடங்கள் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.