ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது-ஸ்டாலின் அறிக்கை

Default Image

ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

சமீப காலமாக தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை  சோதனை நடத்தினார்கள்.துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தினார்கள்.அதேபோல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள்.சோதனைகுறித்து அதிகாரிகள் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

பின்னர்  வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர் என்று கூறினார்.

இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், அதிமுக – பாஜக கூட்டணியின் தோல்வி உறுதியானதால் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் நடந்துள்ள ஃபாசிஸ்ட் பாய்ச்சலையும் – சேடிஸ்ட் சேட்டையையும் கண்டு திமுக அஞ்சாது.மேலும் பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் சுதந்திரமான அமைப்புகள் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்