எம்.ஜி.ஆரை பார்த்த கட்சி… யாருக்கும் தி.மு.க. அஞ்சாது.. விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
திமுக என்பது அஞ்சாத ஒரு பனங்காட்டு நரி என திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் : த.வெ மாநாட்டில் விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்துப் பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார்.
எனவே, விஜய் பேசிய விஷயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தத ஐ.பெரியசாமி “இதுவரை எத்தனையோ பேர் அரசியல் கட்சிகளைத் தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். திமுக அப்படிப் பல கட்சிகளைப் பார்த்திருக்கிறது. குறிப்பாக, 1973-ஆம் ஆண்டிலே எம்.ஜி.ஆரையே பார்த்துவிட்டு வந்திருக்கிறது.
எல்லா வகையான அரசியல் போராட்டங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். எப்போதுமே, திமுக என்பது அஞ்சாத ஒரு பனங்காட்டு நரி. கிட்டத்தட்ட இதுவரை 75-ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு கழகமாக திமுக இருக்கும். யார் அரசியலுக்கு வந்தாலும் அதில் திமுகவுக்கு எந்த கஷ்டமும் கிடையாது.
யார் அரசியலுக்கு வந்தாலும் எங்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சி தான். எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய பக்கம் மக்கள் நிற்கிறார்கள். எனவே, எங்களுடைய மீதே எங்களுக்கு நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 7 முறை ஆட்சி அமைத்திருக்கிறோம். ஒரு முறை கூட கூட்டணி ஆட்சி என்பது இருந்ததில்லை. எனவே, வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கட்சித் தலைவர் தான் அறிவிப்பார்” எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025