திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களும் வழிபட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பாஜகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது. திமுக போலி மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறது.
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசு புறந்தள்ளப்பட வேண்டிய அரசாக உள்ளது. செய்த பாவங்களை போக்க கோவில்களுக்கு அதிகளவில் வருவது திமுகவினர் மட்டுமே. வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் வழிபாட்டிற்கு தடை செய்வது தமிழக அரசின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025