ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான்.. ! முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது- ஸ்டாலின் ..!

Default Image

வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து, வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போதையை நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 30%க்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.

ஆட்சி அமைக்க இருப்பது திமுக தான்! வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்து விட முடியாது என்றாலும் – எங்காவது ஓர் அதிகாரி அதைச் செய்து விடக் கூடும் என்பதால் அதிகக் கவனம் அவசியம். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.

எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர் குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் உடனடியாகத் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது. தொண்டர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

பெருந்தொற்று பரவக் காரணம் ஆகிவிடக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்