திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது – அமைச்சர் கடம்பூர் ராஜூ
திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.இதன் பின் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவில் இருந்துதுரைசாமி,செல்வம் உள்ளிட்டோர் வெளியேறிவிட்டனர். ஏற்கனவே கருணாநிதி மறைவிற்கு பின்னர் அழகிரி தனித்து உள்ளார்.தற்போது மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.ஸ்டாலின் கனிமொழிக்கு எதிராக உதயநிதியை முன்னிறுத்தி வருகிறார். திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.