தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது- அமைச்சர் ஜெயக்குமார்
தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், இரு மொழி கொள்கை தான் தமிழக அரசின் நிலை ஆகும், இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் அல்ல.தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது.தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது, அதிமுக.
மேலும் கன்டெய்னர் போக்குவரத்தை சீரமைக்க ரூ.500 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.