சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் ஒரு சரித்திர சாதனை படைத்து அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக்க வேண்டும். இயக்கத்தை மீட்டு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை நாம் பெறுவோம் என்ற குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும். சில கட்சிகளுக்கு ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்த குக்கர் சின்னத்தையே தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்தது.
அமமுக அணி தான் முதல் அணியாக இருக்கும். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருக்கும் அணியாக இருக்கும். தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் சின்னம்மாவை வரவேற்றனர். சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக நிச்சயம் பாதுகாவலர்கள் இல்லை; உங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எங்களது அணியில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் வருமா என இப்போது கூறமுடியாது. சசிகலா சட்டப் போராட்டம் நடத்துவதால் அமமுக தலைவர் பதவியை அவருக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அணி இல்லை; அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…