இரட்டை வேடம் போடுவதில் கைதேர்ந்த கட்சி திமுக – ஓபிஎஸ் அறிக்கை

Default Image

மழை நீரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

மழை நீரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நிலைப்பாடு என்பதை ஒவ்வொரு பிரச்சனையிலும் எடுத்து வரும் தி.மு.க. அரசு, தற்போது பயிருக்கான நிவாரணம் வழங்குவதிலும் அதே நிலைப்பாட்டை எடுத்து, ‘இரட்டை வேடம்’ போடுவதில் கைதேர்ந்த கட்சி தி.மு.க. என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக பெருத்த பயிர்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், இது குறித்து ஆராய மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு செய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஆய்வறிக்கையினை அளித்தது. இதன் அடிப்படையில், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஆறாயிரத்து முப்பத்தெட்டு ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது, பாதிப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கி அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021 ஜனவரி மாதம் அறிவித்தபோது, அதனை விமர்சனம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அறிக்கை விடுத்து, அந்தச் செய்தி 17-01-2021 நாளிட்ட நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. ஆனால், அண்மையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சிக்கு வருவதற்காக பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த பிறகு, ஏக்கருக்கு 8,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் என்று அறிவித்து இருப்பது சற்றும் பொருத்தமற்ற ஒன்றாகும். இந்தச் செயல் விவசாய பெருங்குடி மக்களை வஞ்சிக்கும் செயல்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கின்ற விவசாயிகள், இயல்பாக பெய்யும் மழையை விட 50 விழுக்காடு கூடுதல் மழை பொழிந்து, வெள்ளமாகி, அறுவடைக்குத் தயாராயிருந்த குறுவை பயிர்களும், பெரும்பாலான சம்பா பயிர்களும், அனைத்து தாளடி பயிர்களும் பத்து நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும், எஞ்சிய சம்பா பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர், வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில், டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை தொடருவதற்கான வாய்ப்பிருக்கின்ற நிலையில், மறு சாகுபடி என்பது கேள்விக்குறி தான் என்றும், வடகிழக்கு பருவமழை டிசம்பரில் முடிந்த பின்னர் தான் மறு சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையில், ஜனவரி இறுதியில் மேட்டூர் அணை மூடப்படுகிறபோது நிலத்தடி நீர் கிடைக்க வாய்ப்புள்ள சிலரே மறு சாகுபடி செய்ய முடியும் என்றும், சாகுபடி செய்வதற்கு என்ன செலவாகிறதோ கிட்டத்தட்ட அதே செலவுதான் மறு சாகுபடிக்கும் ஆகும் என்றும், மறு சாருபடி என்பது மறு பரிசீலனைக்குரியது என்றும், குறுவை நெற்பயிருக்கு காப்பீடு இல்லை என்றும் விவசாயப் பெருங்குடி பக்கள் தெரிவிக்கிறார்கள்.

நற்போது நீரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த ஆண்டு துவக்கத்தில் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப எக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு தாப்பட வேண்டும் என்பதே விவசாயப் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரணம் குறித்த அறிக்கை, அவசர கோலத்தில் எடுக்கப்பட்டதாகவும், இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் விவசாயிகள் நரப்பில் கூறப்படுகிறது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுந்த கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், நிரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்