தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக. கொரோனா சமயங்களில் மக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்னும் செயல்பாட்டின் மூலம், கட்சி பாகுபாடின்றி உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.
கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திடுங்கள். இரண்டாவது கொரோனா அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, உங்கள் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல், வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர்களை வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும் அது வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்திட ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே..! என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…