ஈரோட்டிலும் திமுக தான்..! வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வெற்றி ..!!
மக்களவை தேர்தல் : நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற முடிந்த தேர்தலுக்கான வாக்கு எணிக்கையானது இன்று காலை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்து வந்து பெருபாலான தொகுதியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மக்களவை தொகுதியான ஈரோட்டிலும் திமுக சார்பாக போட்டியிட்ட கே.பிரகாஷ் 5,20,971 வாக்குகள் பெற்று 2,16,361 வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளரான அசோக் குமார் 3,04,610 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார். மேலும், 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கார்மேகன் 77,983 பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.