விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு 103 வயது ஆகிவிட்டது என்றால் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், லதாவை தூக்கிக்கொண்டு டூயட் பாடும் எம்ஜிஆரை தான் அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் இளமையாகவே இருந்தார், எளிமையாகவே வாழ்ந்தார், இளமையாகவே மறைந்தார், வாழுகிற வரை, இறக்கிற வரை மக்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருந்தார் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் எதிர்க் கட்சிகளுக்கு தோல்வி பரிசாக காத்திருக்கிறது என்றும், அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும் என்றார். நாட்டில் இனச்சண்டை, மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போட வைத்து அதில் குளிர் காய்கின்ற கட்சி திமுக என்று விமர்சித்தார். குத்து சண்டை, சிலம்பாட்டம் போன்ற வித்தைகளை தெரிந்தவர்கள் அதிமுகவினர். கழகத்தின் கட்டுப்பாட்டிற்க்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறார்கள். திமுக காரர்கள் சண்டைபோட்டு ஜெயிக்க நினைத்தால் எந்த காலத்திலும் அதிமுகவை ஜெயிக்க முடியாது என தெரிவித்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…