நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இதனால் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ராதாமணி ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எனவே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தது.தற்போது தமிழக சட்டப்பேரவை செயலர் விக்கிரவாண்டி தொகுதிகாலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…