தி.மு.க. தோழமைக் கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தீர்மானங்களின் விவரங்கள்…
- கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கொரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு – அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- அரசியல் கண்ணோட்டத்துடன் காவல் துறை நடக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தோர் – பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- “நீட்” தேர்வை ரத்து செய்ய வேண்டும்,ப்ளஸ் டூ” மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் விவரம்:
Link: https://t.co/6FFyiYzrJ2#DMK #MKStalin pic.twitter.com/6lq2yq27th
— DMK (@arivalayam) July 27, 2020