இன்று கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்.!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.
இதில், கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
முதலவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் கூடுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாடு பயணங்கள் குறித்தும் பேசப்பட இருக்கிறது.