அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து முதல்வர் மற்றும் கருணாநிதியின் படத்தை திமுகவினர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா உருவப்படத்தை இன்று காலை திமுகவினர் மறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தை ஒட்டி உள்ளனர். ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும், மற்றொருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த அதிமுகவினர் அங்கு ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்த திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை அகற்றி, பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…