கல் எடுத்து வீசும் அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்கு செல்லும்? என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்யொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை:
இந்த சமயத்தில் அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்டில் ஆலோசனை நடந்தது. தேர்தல் பிரச்சாரம், வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தேர்தல் பணிக்குழு:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். வாக்கு சேகரிப்பு, வெற்றி வியூகம் குறித்து கலந்தாலோசித்தாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:
இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, 22 மாத கால ஆட்சியில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, தினமும் 2 முதல் 4 கொலைகள் நடக்கின்றன. திமுகவினர் தேர்தலுக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர்கள். கல் எடுத்து வீசும் அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்கு செல்லும்? என விமர்சித்தார்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…