திமுக எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Default Image

கல் எடுத்து வீசும் அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்கு செல்லும்? என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு:

epsadmkmeeting

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்யொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றார்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை:

epstoday

இந்த சமயத்தில் அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.  ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்டில் ஆலோசனை நடந்தது. தேர்தல் பிரச்சாரம், வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தேர்தல் பணிக்குழு:

senkotaiyanerode

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். வாக்கு சேகரிப்பு, வெற்றி வியூகம் குறித்து கலந்தாலோசித்தாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:

epsstalin

இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, 22 மாத கால ஆட்சியில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, தினமும் 2 முதல் 4 கொலைகள் நடக்கின்றன. திமுகவினர் தேர்தலுக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர்கள். கல் எடுத்து வீசும் அமைச்சர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சி பாதைக்கு செல்லும்? என விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்