இலங்கை தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது – அமைச்சர் உதயகுமார்
- இலங்கை தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
- மேலும் அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை ஸ்டாலின் அறிவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .தமிழக அரசுக்கு எதிராக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதையும் செய்ய தயாராக இருக்கிறார் ஸ்டாலின் .இலங்கை தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.
ஆறு நாளில் ஆட்சி கலைந்து விடும் என்று ஆசை கோட்டை கட்டியிருந்த ஸ்டாலின், ஆயிரம் ஆண்டுகள் நிலை பெறும் அரசாக அ.தி.மு.க. அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கி அறிக்கை விடுகிறார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. பங்கு வகித்திருந்த போது, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தரவில்லை . எது நடந்தாலும் அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சிந்தனையில் இருந்து வெளிவந்தால் தான் பொது வாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும் என்று தெரிவித்துள்ளார்.