சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது.! – கனிமொழி எம்.பி

Published by
அகில் R

2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை  தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது.

இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி எம்.பி தலைமையிலான இந்த தேர்தல் அறிக்கை குழு கூடி கருத்துகளை சேகரித்தது.

எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அமித் ஷா கூறவில்லை-அண்ணாமலை விளக்கம்..!

அப்போது கனிமொழி பேசுகையில், “வழக்கமாக தென்மாவட்டங்களில் நிதி சற்று குறைவாகவே ஒதுக்க படுகிறது ஓவ்வொரு ஆண்டும் இந்த நிதி குறைந்து வரும் சூழலை நாம் பார்க்கிறோம் இது போன்ற கோரிக்கைகள் வருகிறது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில்  இருக்கிற குழப்பங்களும், விவசாயிகளுக்கு இருக்க கூடிய பிரெச்சனைகள் எல்லாம் மக்கள் கோரிக்கையாக வழங்கி கொண்டிருக்கிறார்கள்” என கூறினார்.

மேலும் , இதே போன்று தான் சென்ற முறையும் மக்களிடம் கருத்து கணிப்பு கேட்டு தான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுருப்பீர்கள், அதில் இந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு உங்களை எவ்வாறு ஒத்துழைத்தார்கள்? எந்த மாதிரியான திட்டங்களை நீங்கள் கூறி இருக்கிறீரகள் ? அதில் எத்தனை விகிதம் அவர்கள் நிறை வெற்றி உள்ளனர் ? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார், அதற்கு, ” சென்ற முறை நடைபெற்றது சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை அதில் நாங்கள்   கொடுத்துள்ள அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றி கொண்டு தான் இருக்கிறோம்.

அதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் உங்களுக்கே தெரியும் அவர்களுடைய வாக்குறுதிகளை கூட அவர்கள் செய்யவில்லை. அதில் விவசாயிகளுக்கான தொகை குறைந்து கொண்டே வருகிறது, தென் மாவட்டத்தில் அமைய போகும் ரயில் திட்டங்களுகாண தொகை குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கல்விக்காக ஒதுக்குகிற நிதிகளும் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை கூட அவர்கள் செய்யவில்லை”, என்றும் கூறினார் .

மேலும், தேர்தல் அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது, மக்களின் கருத்துகள் எல்லாம் தமிழக முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறினார்.

Recent Posts

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

1 hour ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

2 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

2 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

21 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

22 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

22 hours ago