பிரதமர் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார்.! காரணம் இதுதான்.. திமுக விளக்கம்.!

MK Stalin - PM Modi

MK Stalin – சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையில், தற்போது புதியதாக 500 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக கல்பாக்கத்தில் தான் அதிகளவு திறன் கொண்ட ஈனுலை திட்டம் துவங்கப்பட உள்ளது.

Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! 

இந்த ஈனுலை திட்டத்தை செயல்படுத்த புளுட்டோனியம் பயன்படுத்தப்படுகிறது. அதனை குளிர்விக்க திரவ சோடியம் பயனப்டுத்தப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதன் கதிவீச்சு என்பது அதிகமாக இருக்கும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள், பல்வேறு கட்சியினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் பிரதமர் மோடி துவங்கி வைக்கும் இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இன்று கடலூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டை அழித்தொழிக்கவே கல்பாக்கம் ஈனுலை திட்டம் துவங்கப்படுகிறது. அதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Read More – மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

மேலும், எங்கள் ஆட்சி காலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்கப்பட வில்லை. அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை வாங்கியது திமுக ஆட்சியில் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்