முதல்வருக்கு போனில் வாழ்த்து தெரிவிக்க, செல்ஃபி எடுக்க வேண்டுமா.? திமுகவின் புதிய ஏற்பாடு.!
முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க மற்றும் அவரது புகைப்படத்துடன் தத்ரூபமாக செல்பி எடுத்துக்கொள்ள திமுக ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுகளுக்கு நாளை 70வது பிறந்த தினம். இதனை கொண்டாட தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
முதல்வருடன் செல்ஃபி : தற்போது selfiewithCM.com என்ற இணையதளம் மூலம் உள்ளீடு செய்து அதில் உள்ள பல்வேறு பரிணாமங்களில் இருக்கும் முதல்வரின் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதில் ஒரு புகைப்படத்தில் இருந்து நீங்கள் செல்பி எடுத்துக்கொள்ளலாம்.
போனில் வாழ்த்து : அதே போல, முதல்வருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்க 07127 1913 33 என்ற எண்ணுக்கு கால் செய்து அதில் 30 வினாடிகளில் உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம் என திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்துள்ளாது.