திமுகவுக்கு பொட்டி வாங்கியே பழக்கம், அதனால் தான் பொட்டி வாங்கி மேடையில் வைத்துள்ளார் – முதல்வர் விமர்சனம்
திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தது என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக திட்டங்கள் மற்றும் சாதனை பட்டியலை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபுரம் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கியுள்ளார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக கட்சிக்கு பொட்டி வாங்கியே பழக்கம், அதனால் தான் தற்போது பொட்டி வாங்கி கொண்டு முக ஸ்டாலின் மேடையில் வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தது என்றும் பேசியுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் உங்கள் குறைகள் தீர்க்கப்படும் என்று சொல்லும் முக ஸ்டாலின், இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தார் என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வளவு நாள் பதவில் இருந்திங்க, எத்தனை முறை திமுக ஆட்சிக்கு வந்தது, அப்போதெல்லாம் ஏன் நாட்டு மக்களை சந்திக்கவில்லை
நாட்டு மக்களை சந்திக்காத கட்சிதான் திமுக என்றும் நாட்டு மக்களை மறந்ததால், இன்றைக்கு திமுகவை மக்கள் மறந்துவிட்டார்கள். மக்களை ஏமாற்றி திமுக நாடகம் ஆடுகிறது என குற்றசாட்டியுள்ளார். வீட்டில் இருந்தே 1100 என்ற எண்ணை அழைத்தால் அரசின் சேவையை விரைவில் பெறலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.