தி.மு.க. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பொன். ராதாகிருஷ்ணன்..!

Published by
Dinasuvadu desk
தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதற்காக கோபாலபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தனது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்து செயல்பட்டு வெற்றி பெற்றவரும் தமிழகத்தின் அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்து செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் ஐயா கலைஞர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான 95வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்ற இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அற்புதமான அவரது தமிழை கேட்கும் ஆவலோடு இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக அவரது குரல் கேட்க காத்திருக்கிறேன் என்பதை இந்த நல்ல நாளில் தெரிவித்து டாக்டர் கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும் என மீண்டும் வாழ்த்தி எல்லாம்வல்ல அன்னை சக்தியின் அருள் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

1 hour ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

2 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

2 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

3 hours ago

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

3 hours ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

3 hours ago