BJP State President Annamalai [File Image]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கள்ளக்குறிச்சி வந்திருந்து விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில்,, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இங்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. அவர் இங்கும் வாரிசு அரசியல் செய்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைக்கிறார்.
இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பது, சஸ்பெண்ட் , இடமாற்றம் செய்வது, நெஞ்சு பதறுகிறது என அறிக்கை வெளியிடுவது ஆகியவை எங்களுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக, இந்த உயிரிழப்புக்கு தொடர்பான துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். 1000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் புதிய மதுபான கொள்கையை கொண்டு வரவேண்டும்.
இதனை செய்யாவிட்டால், நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் முடிந்து பின்னர் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பாஜக தொண்டர்கள் கோட்டையை (சென்னை ஜார்ஜ் கோட்டை) நோக்கி வருவார்கள். தற்போது சிபிசிஐடி விசாரணை தேவையில்லை. சிபிசிஐடி என்பது ஒரு தவறு நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டிய அமைப்பு. அவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள். உடனடியாக இந்த வழக்கை சிபிசிடிக்கு மாற்றுங்கள் கண்டிப்பாக இந்த சம்பவத்துக்கு ஆளும் கட்சி தொடர்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…