ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது – ஈபிஸ்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
எடப்பாடி பழனிசாமி அவர்கள், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யும். ஏழை மக்களின் நலன்காக்க தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.