திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்! – சீமான்

Default Image

‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சீமான்.

இதுதொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சீமான், தமிழ்ந்தேசிய வடகாவியமானர் தமட சாட்டை அரை முருகன் மீது அரசியல். காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளி வந்துவிடக்கூடாது என்ற பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும்.

தம்பி துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தைச் சகிக்க முடியாது, சிறைதண்டனை மூலம், அவரை உளவியலாக அச்சுறுத்தி முடக்க நினைக்கும் திமுக அரசின் கொடுங்கோன்மைபோக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மாற்றுக்கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்பவரை ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அதிகார அத்துமீறலுக்கு எதிராகவும் அறத்தின் பக்கம் நின்று குரல் எழுப்புவோரையும் தொடர் சிறைவாசம் மூலமாகச் சித்ரவதை செய்து, தனக்கு எதிராக எவ்வித எதிர்க்கருத்தும் எழவேக்கூடாது என்கின்ற ஆளும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையால், சனநாயக மாண்புகளும், கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறது.

சனநாயக விழுமியங்களின் மீது பற்றுறுதி கொண்டவர்கள் கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் இதுபோன்ற கொடுங்கோல்போக்கினை எதிர்த்துப்போராட எதிராகக் குரல் கொடுக்க அணிதிரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள், கடந்த மாதம் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் குணமடைந்தனர். இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக டந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

சமூகவலைதங்களில் வந்தந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament