வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விடும் திமுக அரசு – ஆர்.பி. உதயகுமார்
வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான் மிச்சமாக இருந்து, கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை என்பது போல தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகளின் தேர்தல் தொடர்பான அதிமுகவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடப்பட்ட யதார்த்த நிலையை மக்கள் புரிந்துள்ளார்கள்.
202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் மக்கள் மத்தியில் அதை செயல்படுத்தியதியதற்கான எந்தப் பதிவும் இல்லை. வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான் மிச்சமாக இருந்து, கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை என்பது போல தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும் தற்போது தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது. அதை போன்று சட்ட ஒழுங்கு பெரிய சவாலாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. இவற்றையெல்லாம் மக்கள் எண்ணி பார்த்ததால் தான் நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு வரவேற்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.