மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள தி.மு.க.அரசு – டிடிவி தினகரன்
மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.
தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென நினைக்கிறேன். காவிரி நடுவர் மன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தார்.
டிடிவி ட்வீட்..!
மேகதாது ஆணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள தி.மு.க.அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை தி.மு.க.வின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதலமைச்சர் திரு.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதலமைச்சர் திரு.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 21, 2022