“தொழிலார்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற திமுக அரசு” – ஓபிஎஸ்

Published by
Edison

அரசுப் போக்குவரத்து தொழிலார்களை அரசியல் கண்ணோட்டத்துடன் திமுக அரசு பார்க்கின்றதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற அரசாக தற்போதைய தி.மு.க. அரசு விளங்குவதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

போக்குவரத்து இன்றியமையாதது:

மனித வாழ்க்கைக்கு உணவும் உறைவிடமும் போன்று போக்குவரத்தும் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த போக்குவரத்தினை திறமையாகவும், நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்கள்:

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

பழிவாங்கும் நிலைமை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், பழிவாங்கும் நிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை,அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவிய தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை இடமாறுதல் செய்யாமல் அவர்களுக்கு வழித்தட பணியாணை (Route Posting) வழங்கப்பட்டதோடு,
உடல் நிலைக் குன்றியவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றக் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும் பயனடைந்தார்கள். தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற  தி.மு.க. அரசு:

ஆனால், தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற அரசாக தற்போதைய தி.மு.க. அரசு விளங்குவதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகிறார்கள். அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வழித்தட பணியாணை மறுக்கப்படுவதாகவும், அவர்களைவிட பணியில் இளையவராக உள்ளவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்படுவதாகவும், எவ்வித காரணமுமின்றி அவர்கள் பணிமனை மாற்றம் செய்யப்படுவதாகவும், சில நேர்வுகளில் பணிவழங்க மறுப்பதாகவும், பணிக்கு வரும் மூத்தத் தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவு கூட வழங்காமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், அண்ணா தொழிற்சங்கம் பயன்படுத்தி வந்த சங்க அலுவலகங்களை வலுக்கட்டாயமாக தி.மு.க.வினர் எடுத்துக் கொள்வதாகவும் அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து வளர்ச்சிக்கு முதுகெலும்பு:

தமிழ்நாட்டின் போக்குவரத்து வளர்ச்சிக்கு முதுகெலும்பாக, அடித்தளமாக, ஆணிவேராக விளங்கும் தொழிலாளர்களை அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் அடிப்படையில் பிரித்து பார்த்து, அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.

ஒரே கண்ணோட்டம்: 

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப் பணி, பதவி உயர்வு எனஅனைத்தும் விதிகளுக்குட்பட்டு நடைபெறவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

4 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

8 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

9 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

9 hours ago