உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு – முதல்வர் மு.க ஸ்டாலின்!
மழையால் பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தேன் என்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதல்வர் பேட்டி.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், விவசாயிகளை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன்.
முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முறையாக தூர்வாரியதால் தேங்கிய நீர் வடிய உதவியாக இருந்தது. 17.46 லட்சம் ஹெக்டர் சம்பா பயிர் நடப்பு ஆண்டில் பயிர்ப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 68,652 ஹெக்டர் பரப்பு சம்பா பயிர்கள் நேரில் மூழ்கியுள்ளன.
இறையளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் தூர்வாரப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது என்றும் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னேறிவிப்பின்றி செம்பரப்பக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு எனவும் குற்றசாட்டினார்.