திமுக அரசு பழிவாங்கும் அரசாக இருக்கக்கூடாது- ஜி.கே.வாசன்..!

தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக இருக்கக்கூடாது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த த.மா.க. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக இருக்கக்கூடாது.
தமிழக அரசைப் பொருத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகி களுடன் கலந்துபேசி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிடுவோம் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025