சென்னை:திமுக அரசு சரியாக திட்டமிட்டு செயல்படாமல் இருந்ததால்தான்,தற்போது சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில்,பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.குறிப்பாக,சென்னையில் பல பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில்,சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.இதனைத் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.அதன்பின்னர்,செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது:
“திமுக அரசு சரியாக திட்டமிட்டு செயல்படாமல் இருந்த காரணத்தினால் தான் சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.6 மாத காலமாக திமுக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.நாங்கள் இதை செய்வோம்,அதை செய்வோம் என்று சொல்கிறார்கள்.ஆனால்,சென்னையில் முழுமையாக தூர்வாரப்படவில்லை.
முழுமையாக தூர் வாரப்பட்டிருந்தால்,நல்ல வடிகால் வசதி செய்யப் பட்டிருந்தால்,மழைநீர் தேங்காமல் வெளியேறி இருக்கும்.அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் மாதமே முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டன.ஆனால்,திமுக அரசு அவற்றை செய்ய தவறியதால்தான் சென்னையில் பல இடங்கள் இன்று வெள்ளத்தில் மிதக்கின்றன.
அரசின் திறமையின்மையை மறைக்கவே அதிமுக மீது குற்றம் சுமத்துகின்றனர்.ஆனால்,அதிமுக அரசு திறமையாக செயல்பட்டதன் காரணமாகவே முன்னதாக மத்திய அரசிடம் விருதுகளை வாங்கி குவித்தது.
எனவே,போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…