கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசு!இபிஎஸ் கடும் கண்டனம்!
விழுப்புரம் : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தியே உலுக்கி இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அடுத்த அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், இதற்கு தன்னுடைய கண்டங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 10, 2024