“திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல” – அமைச்சர் சேகர்பாபு!

Default Image

நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:”அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகரூ.ர்களாக கோயில்களில் நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்,தமிழ்கத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்ப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 437 பேரிடம் இருந்து ரூ.1640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கோயில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும். தமிழக அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது.இதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்