நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!!

அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 125 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார்.
இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். இந்த தொகுதி வாக்கு எண்ணிக்கையில், திமுக பொதுச்செயலாளர், வேட்பாளருமான துரைமுருகன் ஆரம்ப முதலே பின்னடைவில் இருந்து வந்தார். பின்னர் அதிமுக, திமுக என மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில், துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
அதாவது, 17-வது சுற்று முடிவில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு 55,267 வாக்குகளும் பெற்றுருந்தனர். மீண்டும் சரிவை கண்ட துரைமுருகன், இந்த முறை வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், முடிவுக்கு வந்தது இழுபறி… 754 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமுவைப் பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025