ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் ! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Default Image

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.அண்மையில் மறைந்த திமுக உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து  தீர்மானம்
  • இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம்
  • வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்
  • வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம்
  • திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்
  • தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி தீர்மானம்
  • தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்யக்கோரி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மத்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களை மட்டுமே நியமிக்க வலியுறுத்தி  தீர்மானம்
  • ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, சேலம் இரும்பாலை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும் தீர்மானம்
  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கோரி திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
  • கருணாநிதிக்கு சிறப்பான அருங்காட்சியகம் அமைக்க பொதுக்குழுவில் தீர்மானம்
  • பொள்ளாச்சி வழக்கில் குண்டர் சட்டத்தில் ரத்து செய்யப்பட்டதற்கும், கோடநாடு வழக்குகளைக் கண்டித்தும் தீர்மானம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்