நாளை காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரு பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுக்கள் செய்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நாளை (செப்டம்பர் 9-ஆம் தேதி )திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.நாளை காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…