இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரு பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுக்கள் செய்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…