இன்று நடைபெறுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்

Default Image

இன்று  காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.

பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.

எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரு பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுக்கள் செய்த நிலையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.இன்று  காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi