அக்.9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூடுகிறது என துரைமுருகன் அறிவிப்பு.
அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் 15-ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும்.
எனவே, அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்தெடுப்பதற்கும், தணிக்கைக்குழு உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கு பொதுக்குழு கூடுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது”
– கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/otkQ8Lktce
— DMK (@arivalayam) September 28, 2022