தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைவது தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளில் வசிக்கும் தமிழ்ப்பெருமக்கள் அனைவருக்கும் தேனான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மற்றுமொரு பங்களிப்பாக, ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைவதற்கு 1 கோடி ரூபாய் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் இந்த நிதியை வழங்குவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை விரைவில் அமைந்து, தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வகை செய்ய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…