வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகஅறிவித்துள்ளனர். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் பாஜக அரசின் செயலைக் கண்டித்து இரு நாட்களில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் நியாயங்களை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்து எடுத்துக்கூறியதைக் கருத்தில்கொண்டு திமுக தனது முழு ஆதரவினை வழங்குகிறது.
கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் – பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை.
வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…