தமிழக சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், 5 ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறீர்கள்? எங்கே கொடுத்தீர்கள்? எத்தனை விவசாயிகள் பயன்பெற்று இருக்கிறார்கள்? என்று ஆவேசமாக கேட்டார்.
இதையடுத்து தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்ற போது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். பின்னர் குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. ஒரு திட்டம் என்று சொன்னால், அதனை அறிவிக்கின்ற போது படிப்படியாக தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் மதுக் கடைகள் படிப்படியாக தான் குறைக்கப்படும் என்று சொல்லி இருக்கின்றார். நாங்கள் குறைத்துக்கொண்டும் இருக்கிறோம் என தெரிவித்தார். உங்களுடைய தலைவர் எப்படி எல்லாம் பேசியிருக்கின்றார் என்ற எல்லா குறிப்புகளும் எங்களிடம் இருக்கிறது.
எல்லோரும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இன்றைக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். படிப்படியாக தான் அதை செயல்படுத்த முடியும். கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அரசு கவனமாக இருந்து, அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்ற செய்தியை சொல்லி இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…