#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என்றால் திமுக தொடுக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.
இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பஞ்சாப்பில் உள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு உறுப்பினர்கள் வேளாண் திருத்த மசோதாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24-ஆம் தேதி முதல் இன்று வரை 7 வது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025