தடையை மீறி போரட்டம்..திமுகவினர் 1,050 பேர் மீது வழக்குப்பதிவு.!
நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகம் வசூல் செய்வதாக பிரபலங்கள் உட்பட பலர் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதில் , ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மின் அதிகம் செலுத்த வேண்டி இருப்பதாக கூறியது. இதையடுத்து, நேற்று திமுக சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடியுடன் தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திருவாரூரில் தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் 1,050 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 76 இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட 1,050 பேர் மீது காவல்துறைவழக்குப் பதிவு செய்துள்ளது.